/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நிரம்பி வழிகிறது சித்திரைச்சாவடி அணைக்கட்டு சிறுவாணியில் திடீர் மழைநிரம்பி வழிகிறது சித்திரைச்சாவடி அணைக்கட்டு சிறுவாணியில் திடீர் மழை
நிரம்பி வழிகிறது சித்திரைச்சாவடி அணைக்கட்டு சிறுவாணியில் திடீர் மழை
நிரம்பி வழிகிறது சித்திரைச்சாவடி அணைக்கட்டு சிறுவாணியில் திடீர் மழை
நிரம்பி வழிகிறது சித்திரைச்சாவடி அணைக்கட்டு சிறுவாணியில் திடீர் மழை
ADDED : ஆக 29, 2011 11:51 PM
பேரூர் : சிறுவாணி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது; இதனால், சித்திரைச்சாவடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.கடந்த ஆண்டோடு, ஒப்பிடுகையில் நடப்பாண்டில், எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை.
இதனால், நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள, கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. கடந்த இரண்டு நாட்களாக, மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதியான, சிறுவாணி, பூண்டி, கோவை குற்றால வனப்பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச் சாவடி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஆற்றிலிருந்து பிரியும் தண்ணீர், கிளை வாய்க்கால் மூலம் அந்தந்த குளங்களுக்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,''வேடபட்டி புதுக்குளம், வாலாங்குளம், கோளராம்பதி, முத்தண்ணன் குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இந்தாண்டு, எதிர்பார்த்த மழையில்லாததால், நரசாம்பதி குளம் 60 சதவீதம், கிருஷ்ணாம்பதி குளம் 90 சதவீதம், பேரூர் பெரியகுளம் 70 சதவீதம்,, பேரூர்செட்டிபாளையம் 50 சதவீதம், குறிச்சிகுளம் 90 சதவீதம், குனியமுத்தூர்குளம் 50 சதவீதம், உக்கடம் பெரியகுளம் 80 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. தற்போது, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திடீரென அதிகரித்துள்ளது. ''மழை தொடர்ந்தால், இன்னும் ஒருவாரத்துக்குள் மீதமுள்ள குளங்களும் நிரம்பி விடும்,''என்றார்.