Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இளைஞர்களுக்கு மர சிற்ப பயிற்சி

இளைஞர்களுக்கு மர சிற்ப பயிற்சி

இளைஞர்களுக்கு மர சிற்ப பயிற்சி

இளைஞர்களுக்கு மர சிற்ப பயிற்சி

ADDED : ஆக 27, 2011 10:55 PM


Google News
சிவகங்கை : காரைக்குடி கனரா வங்கி கைவினைக் கலைஞர் பயிற்சி மையம் சார்பில் வசதியற்ற வேலையில்லா இளைஞர்களுக்கு நூற்றாண்டு அறக்கட்டளை மூலம் 18 மாத மர சிற்பம், உலோக சிற்ப பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கு குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பும், 16 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சி காலம் 18 மாதங்கள். பயிற்சி காலத்தில் உணவு, உடை, தங்கும் வசதி, பயிற்சிக்கான மூலப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்களுக்கு 2 வருடம் சுய வேலைவாய்ப்புக்கான சேவையும், வங்கி கடன் தேவையில், கனரா வங்கி முன் உரிமையும் வழங்குகிறது. ஆர்வமுள்ள இளைஞர்கள் கனரா வங்கி கைவினை கலைஞர்கள் பயிற்சி மையம், நெசவாளர் காலனி, மானகிரி ரோடு, காரைக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04565 232 423, 98436 55960 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் டில்லி சடகோபன் தெரிவிக்கிறார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us