அரசு பொருட்காட்சி வசூல் ரூ. 5 லட்சம்
அரசு பொருட்காட்சி வசூல் ரூ. 5 லட்சம்
அரசு பொருட்காட்சி வசூல் ரூ. 5 லட்சம்
ADDED : ஆக 16, 2011 04:09 AM
சேலம்: சேலம் அரசு பொருட்காட்சிக்கு அதிகமான பார்வையாளர்கள் வருகையால், ஐந்து நாளில், 5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 10ம் தேதி முதல் அரசு பொருட்காட்சி நடக்கிறது.
அரசு பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களிடம் நுழைவுகட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 14ம் தேதி ஒரு நாளில் மட்டும், 21 ஆயிரத்து 366 பெரியவர்களும், 4 ஆயிரத்து 380 சிறியவர்களும் என மொத்தம் 25 ஆயிரத்து 746 பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர். அதன் மூலம், நுழைவு கட்டணமாக, 2 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபாய் வசூலானாது.அரசு பொருட்காட்சிக்கு கடந்த ஐந்து நாட்களில், 51 ஆயிரத்து 445 பேர் வந்ததன் மூலம் நுழைவு கட்டணமாக, 5 லட்சத்து 68 ஆயிரத்து 305 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


