குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம்
குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம்
குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : திருப்பூர் தெற்கு மெட்ரிக் பள்ளிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் எட்டு குறுமையங்களில் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு குறுமைய விளையாட்டு போட்டி தனித்தனியே நடத்தப்படுகிறது. பாரத் மெட்ரிக் பள்ளி மற்றும் ப்ளூபேர்டு பள்ளி சார்பில் திருப்பூர் தெற்கு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கான குறுமைய விளையாட்டு போட்டி, விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் துவங்கியுள்ளது. மாணவர் பிரிவில், கூடைப்பந்து, டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கேரம் உள்ளிட்ட 21 வகையான போட்டிகள், மாணவியர் பிரிவில், பீச் வாலிபால், செஸ், கபடி, ரோடு சைக்கிளிங் உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்படும். 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள், வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.