Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/விளை பொருள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

விளை பொருள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

விளை பொருள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

விளை பொருள் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 13, 2011 02:35 AM


Google News

பெரம்பலூர்: 'எளம்பலூர் சமத்துவபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து விவசாய விளை பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்' என வேளாண் துணை இயக்குநர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரம் எதிரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது.

இதில் வரும் 15ம் தேதி முதல் விவசாயிகளின் வேளாண் விளைப்பொருட்களான மக்காச்சோளம், நிலக்கடலை, எள் போன்றவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை நன்கு காயவைத்து சுத்தம் செய்து ஒழங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us