/உள்ளூர் செய்திகள்/கரூர்/இலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடுஇலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடு
இலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடு
இலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடு
இலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடு
ADDED : செப் 23, 2011 01:23 AM
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்ட அரசு மருத்துவத் துறை மற்றும்
டி.என்.பி.எல்., சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஆலை சமுதாயக்
கூடத்தில் நடந்தது.
முகாமில் 511 பேருக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு,
இருதயம், எலும்பு, தோல், குழந்தைகள் நலம், மகப்பேறு, கர்ப்பப்பை, பல்,
காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்
அறிகுறிகளுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ரத்த
வகை கண்டறியும் சோதனை மற்றும் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 320
பேருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்டறியப்பட்டது. 35 பேருக்கு இ.சி.
ஜி., பரிசோதனை செய்யப்பட் டு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து
மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனை
கண்காணிப்பாளர் ரகுநாத், டி.என்.பி.எல்., ஆலை முத ன்மை பொது மேலாளர் மணி,
துணை பொது மேலாளர் பட்டா பிராமன், சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் ராஜு,
டாக்டர்கள் விஜயகுமார், பரதன், அன்பழகன், சக்திவேல், விஜயகுமார்,
பெரியசாமி, சாந்தாதேவி, சிகிதா உள்பட பலர் பங்கேற்றனர்.