Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கருங்குளம் யூனியனில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயார்

கருங்குளம் யூனியனில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயார்

கருங்குளம் யூனியனில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயார்

கருங்குளம் யூனியனில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயார்

ADDED : செப் 22, 2011 12:03 AM


Google News
செய்துங்கநல்லூர் : கருங்குளம் யூனியன் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

16 யூனியன் கவுன்சில்களைக் கொண்டது கருங்குளம் யூனியன். இவ்யூனியனில் ஒரு டவுன் பஞ்.,கூட கிடையாது. முழுவதும் கிராம பஞ்.,களே உள்ளது. 31 கிராம பஞ்.,களை 16 யூனியன் கவுன்சில்களாக பிரித்துள்ளனர். இவ்யூனியனை தாமிரபரணி ஆறு இரண்டாக பிரிக்கிறது. வடபகுதி, தென்பகுதி என இருபிரிவுகளாக உள்ளது. கடந்த 1954 ஆம் ஆண்டு இந்த யூனியன் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இதுநாள் வரை வடபகுதியில் உள்ளவர்கள் தான் யூனியன் சேர்மனாக வந்துள்ளனர். மக்கள் ஓட்டாக இருந்தாலும் சரி, பஞ்., தலைவர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தாலும் சரி, யூனியன் கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தாலும் சரி வட பகுதியினரே சேர்மன் பதவி வகித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இவ்யூனியனில் பஞ்.,ராஜ் சட்டப்படி உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி 16 யூனியன் கவுன்சில்களில் 7 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 5 இடங்கள் பொது பிரிவு பெண்களுக்கும், 5 இடங்கள் தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கும், 2 இடங்கள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்த நிலையில் கவுன்சிலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலிலும் இதே நிலையில் தான் தேர்தல் நடக்கின்றது. இப்போதையை நிலையில் அதிமுக.,6 இடங்களிலும், திமுக.,7 இடங்களிலும், காங்.,2 இடங்களிலும், புதிய தமிழகம், மதிமுக.,ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் உள்ளது. இதில் திமுக.,8 இடங்களாக இருந்தது. சேர்மன் அதிமுக.,வில் இணைந்ததை முன்னிட்டு 7 இடங்களாக குறைந்துவிட்டது. இப்போது பொது மக்கள் யூனியன் சேர்மனை தேர்வு செய்வது நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ற குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் இரண்டு முறைகளில் எது வந்தாலும் சமாளிக்கின்ற நிலையில் வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். தற்போது சேர்மன் வேட்பாளர்கள் யார் என்பதை இன்னும் அரசியல் கட்சிகள் எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் கவுன்சிலர்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. காங்.,கட்சி சார்பில் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு தற்போது 6வது வார்டில் கவுன்சிலராக இருக்கும் செல்வி ஆறுமுகம் மீண்டும் நிற்க முடிவு செய்து கட்சியில் டிக்கெட் கேட்டுள்ளார். அதேபோல் அதிமுக.,கவுன்சிலர்கள் பிச்சையா, யூனியன் சேர்மன் கோசல்ராம் ஆகியோர் மீண்டும் நிற்பதற்கு கட்சியில் டிக்கெட் கேட்டுள்ளனர். திமுக.,வில் ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, ராஜகோபால், பிச்சம்மாள் அய்யாக்குட்டி, இந்திரா நேரு ஆகியோர் மீண்டும் போட்டியிட திமுக.,வில் டிக்கெட் கேட்டுள்ளனர். துணைச் சேர்மன் முருகபெருமாள், யூனியன் கவுன்சிலர் நூர்நிசாம், இமாம் அலி ஆகியோர் போட்டியிட விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிய முகங்கள் போட்டியிட தயாராகி வருகின்றனர். கருங்குளம் யூனியன் திமுக.,வை விட காங்.,கட்சியும், அதிமுக.,வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றது. இப்போதே அதற்கான வேலைகள் துவங்கியுள்ளது. கூட்டணி பற்றி தெரியாததால் தேமுதிக., புதிய தமிழகம், கம்யூ.,கட்சிகள் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வருகின்றது. தேர்தல் அறிவிப்பிற்காக இவர்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிவிப்பு வந்ததும் தேர்தல் வேலைகள் வேகமாக நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us