தமிழக அரசியலில் குழப்பம் : கட்சிகள் தனித்து போட்டி
தமிழக அரசியலில் குழப்பம் : கட்சிகள் தனித்து போட்டி
தமிழக அரசியலில் குழப்பம் : கட்சிகள் தனித்து போட்டி

தி.மு.க.,: தி.மு.க., வெளியிட்டுள்ள செய்தியில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசுடனான உறவில் இருந்து தி.மு.க., விலகி இருந்து வரும் சூழ்நிலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சிதலைவர் யுவராஜா தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறிவருகிறார்.கட்சியின் மூத்த தலைவர்களான இளங்கோவன்,சிதம்பரம், வாசன் போன்ற தலைவர்கள் மவுனமாக இருந்து வருவதும் தி.மு.க.,வை வெறுப்பேற்றி வந்துள்ளது. அதன் எதிரொலிதான் தி.மு.க..,வின் தலைøயின் அதிரடி முடிவு என கருத்து நிலவிவருகிறது. மேலும் பா.ம.க., தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது
அ.தி.மு.க.,: திருச்சி மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பெயர் மற்றும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி தேர்தலில் பாட்டியிட உள்ள மேயர்களின் பெயர் பட்டியலை அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். மேயர் வேட்பாளர்களின்பெயரை கண்ட அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் குறைந்தது 4 மாநகராட்சிகள் ஒதுக்கும் படி தே.மு.தி.க, கோரிக்கை விடுத்திருந்தது . அதே போல் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கோரிக்கைககள் விடுத்திருந்த நிலையில் ஜெ.,வின் இந்த அறிவிப்பு கூட்டணி கட்சியினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ்:தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுதெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ்தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநாவுக்கரசர் இளங்கோவன் ஜே.எம்.ஆரூண், உட்பட பலர் கலந்து கொண்டனர். செப்.,18-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனு விநியோகிக்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 20-ம்தேதி ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மேயர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.10 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ. 5 ஆயிரமாகவும், மாவட்ட ஊராட்சி தலைவர்பதவிக்கு ரூ.3 ஆயிரம், நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் ரூபாயாகவும் விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு தெரிவித்துள்ளார்.மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.