Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/18 மாதங்களில் 61 குழந்தைகளுக்கு வன்கொடுமை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

18 மாதங்களில் 61 குழந்தைகளுக்கு வன்கொடுமை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

18 மாதங்களில் 61 குழந்தைகளுக்கு வன்கொடுமை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

18 மாதங்களில் 61 குழந்தைகளுக்கு வன்கொடுமை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ADDED : செப் 07, 2011 11:58 PM


Google News
மதுரை: தமிழகத்தில் 18 மாதங்களில் 61 குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளானது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல், 48 சதவீத பாலியல் வன்கொடுமை, 64 சதவீத தாக்குதல், ஒரு கொலை, 3 கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த ஆய்வை மேற்கொண்ட மதுரை 'எவிடன்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது : ஜனவரி 2010 முதல் ஜூன் 2001 வரை 18 வயதிற்குட்பட்ட 'ஆதிதிராவிட குழந்தைகள் மீதான வன்கொடுமைகள்' குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாகவும் விபரங்களை சேகரித்தோம். மொத்தம் 14 மாவட்டங்களில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை, தர்மபுரி, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் எந்த வழக்கும் இல்லை. மதுரையில் நடந்த மூன்று சம்பவங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதிகபட்சம் விழுப்புரம் மாவட்டத்தில்தான் 17 சம்பவங்கள் நடந்துள்ளன. அடுத்ததாக வேலூர், தேனி, ராமநாதபுரம், கோவை, சிவகங்கை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 61 வழக்குகளில் 81 ஆதிதிராவிட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் பெண் குழந்தைகள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரவேண்டும். இவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்கள் ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து உள்ளோம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us