/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தனியார் அனல்மின் நிலையத்திற்கு கிராவல் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்புதனியார் அனல்மின் நிலையத்திற்கு கிராவல் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
தனியார் அனல்மின் நிலையத்திற்கு கிராவல் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
தனியார் அனல்மின் நிலையத்திற்கு கிராவல் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
தனியார் அனல்மின் நிலையத்திற்கு கிராவல் ஏற்றிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
ADDED : செப் 03, 2011 01:43 AM
பரங்கிப்பேட்டை : தனியார் அனல்மின் நிலையம் கட்டுமான பணிக்கு கிராவல் ஏற்றிச் சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம், பஞ்சங்குப்பம் கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிக்கு லாரிகள் மூலம் கிராவல் ஏற்றிச் செல்லும் பணி நடக்கிறது. லாரிகள் அதிக அளவில் செல்வதால் இடையூறாக இருப்பதாகக் கூறி சின்னாண்டிக்குழி, பெரியகுப்பம் கிராமத்தினர் ஏற்கனவே தடுத்து நிறுத்தினர். இதனால் வேறுவழியின்றி கரிக்குப்பம் காலனி வழியாக லாரிகள் சென்று வருகிறது.இந்நிலையில் நேற்று, தங்கள் கிராமத்தின் வழியாக லாரிகள் இரவு, பகல் என தொடர்ந்து செல்வதால் இடையூறாக இருப்பதாகக் கூறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கிராமத் தலைவர் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட லாரிகளை காலை 9 மணிக்கு சிறை பிடித்தனர்.கிராம மக்களிடம் அனல்மின் நிலையம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் மாலை 4 மணிக்கு லாரிகளிலிருந்து கிராவலை மீண்டும் கொட்டி விட்டு பரங்கிப்பேட்டை வழியாக லாரிகள் சென்றன.