Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பிள்ளையார்பட்டியில் 6 லட்சம் பேர் குவிந்தனர் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிள்ளையார்பட்டியில் 6 லட்சம் பேர் குவிந்தனர் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிள்ளையார்பட்டியில் 6 லட்சம் பேர் குவிந்தனர் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிள்ளையார்பட்டியில் 6 லட்சம் பேர் குவிந்தனர் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

ADDED : செப் 01, 2011 04:22 PM


Google News
Latest Tamil News

திருப்பத்தூர்: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்கோயில், பிள்ளையார்பட்டி, ஸ்ரீகற்பகவிநாயகர் மதுரை மீனாட்சி கோயில் முக்குறுனி, கோவை ஈச்சனாரி, மணக்குள விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். இல்லம் தோறும் கொழுக்கட்டை வைத்து பூஜித்து வருகின்றனர். சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளளனர். சென்னையில் மட்டும் 600 இடங்களில் விநாயகர் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து சுற்றி வருகின்றனர்.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் காலையில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து திருமுக்குறுணி மோதகம் நிவேதனம் செய்யப்பட்டது.கடந்த ஆக.23 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரண்டாவது நாள் முதல் காலை 9.30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் கற்பகவிநாயகர் வலம் வந்தார். தொடர்ந்து இரவில் தங்க மூஷிகம், சிம்ம,பூத,கமல,ரிஷப,மயில், குதிரை, யானை, வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்தார். ஆக.28 ம் தேதியன்று யானை முகம் கொண்ட சூரனை கற்பகவிநாயகர் வதம் செய்து கஜமுகாசுர சம்ஹாரம் நடந்தது. ஆக.31 ம் நாளன்று மாலையில் தேரோட்டம் நடந்தது. அன்றைய தினம் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அலங்கார தரிசனம் அளித்தார்.



தீர்த்தவாரி: இன்று ( வியாழக்கிழமை ) அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்து பக்தர்கள் வழிபாடு துவங்கியது. தங்க கவசம் அணிந்து மூலவர் பக்தர்களுக்கு தரிசனமளித்தார். தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் பல்லக்கிலும் கோயிலை வலம் வந்து திருக்குளக்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து படிக்கட்டில் கூர்ஜம் மற்றும் அங்குசத்தேவருக்கு கோயில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் கங்காபிசேகம் செய்தார். தொடர்ந்து அங்குசத்தேவரை சோமசுந்தர குருக்கள் குளத்தில் நீராட்டினார். கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் அங்குசத்தேவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்து, தீபாராதனை நடந்தது.



கற்பகவிநாயகர்,சண்டிகேஸ்வரர்,அங்குசத்தேவர், ஆகியோர் வீதி வலம் வந்து கோயிலை சென்றடைந்தனர்.தொடர்ந்து சதுர்த்தி விரதமிருந்தவர்களுக்கு கணபதி ஹோம மண்டபத்தில் பூஜைகள் நடந்து பூர்த்தியானது. மதியம் 12.30 மணிக்கு மூலவருக்கு மகா அபிசேகம் நடந்தது. பின்னர் முக்குறுணி மோதகம் எனப்படும் கொழுக்கட்டை நிவேதனம் செய்யப்பட்டது. இரவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப,தங்க மூஷிக வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்தனர்.



திரண்ட பக்தர்கள் : விழா நடந்த 10 நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தேரோட்டத்தில் பெண்கள் பங்கேற்று உற்சாகத்துடன் வடம் பிடித்தனர். பக்தர்களின் அருகம் புல் மாலைகளை ஏற்கனவே தனியாக கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே உற்சவ விநாயகர் தனியாக வெள்ளி மூஷிக வாகனத்தில்எழுந்தருளியிருந்தார். 6ம் திருநாள் முதல் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கத் துவங்கியது. காலை முதல் பக்தர்கள் கூட்டம் வரத்துவங்கியது. காலை 10 மணிக்கு கூட்டத்தின்வருகை அதிகரித்தது குளக்கரையைச் சுற்றி பக்தர்களின் வரிசை நீண்டது. சிறப்பு தரிசன வரிசையிலும் பக்தர்கள்கூட்டம் அலை மோதியது. சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவை தரிசித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விடக் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us