ADDED : ஆக 14, 2011 10:23 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையால், நேற்று ராமேஸ்வரத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டனர். நேற்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியபின் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தீர்த்தமாடுவதற்காக தெற்குரத வீதியில் பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நீராடினர்.