/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஏர்போர்ட்டில் கடத்தல் நகைகள் பறிமுதல்ஏர்போர்ட்டில் கடத்தல் நகைகள் பறிமுதல்
ஏர்போர்ட்டில் கடத்தல் நகைகள் பறிமுதல்
ஏர்போர்ட்டில் கடத்தல் நகைகள் பறிமுதல்
ஏர்போர்ட்டில் கடத்தல் நகைகள் பறிமுதல்
ADDED : செப் 27, 2011 10:59 PM
திரிசூலம் : சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 11.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது, 12 பேர் அடங்கிய ஒரு குழு மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் சோதனை நடத்திய போது, ஒருவரைத் தவிர மற்றவர்கள் மதிப்பை குறைத்துக் காட்டி, எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு சுங்கவரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு, அனுப்பப்பட்டனர். குழுவில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ராஜா மொகைதீனிடம் சோதனை நடத்திய போது, அவர் 5.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும், 5.43 லட்சம் மதிப்பிலான 217 கிராம் தங்க நகைகளையும் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜா மொகைதீனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.