/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண் பத்திரிகையாளரிடம் ரகளை: வாலிபருக்கு காப்புபெண் பத்திரிகையாளரிடம் ரகளை: வாலிபருக்கு காப்பு
பெண் பத்திரிகையாளரிடம் ரகளை: வாலிபருக்கு காப்பு
பெண் பத்திரிகையாளரிடம் ரகளை: வாலிபருக்கு காப்பு
பெண் பத்திரிகையாளரிடம் ரகளை: வாலிபருக்கு காப்பு
ADDED : செப் 19, 2011 01:53 AM
சென்னை : பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவான்மியூர், பத்திரிகையாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷில்பா, 22. அம்பத்தூரில் உள்ள, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, திருவான்மியூர், ஆர்.டி.ஓ., சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ஷில்பாவை கிண்டல் செய்ததோடு, தகாத முறையில் நடந்து கொண்டார். இதுகுறித்து, ஷில்பா கொடுத்த புகாரின் பேரில், திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து திருவான்மியூர், பி.டி.சி., காலனி, நான்காவது தெருவைச் சேர்ந்த ஜெஸ்டீன், 29. என்ற அந்த வாலிபரை கைது செய்து, கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.