ஏற்ற, இறக்கத்துடன் மல்லிகைப்பூ விலை
ஏற்ற, இறக்கத்துடன் மல்லிகைப்பூ விலை
ஏற்ற, இறக்கத்துடன் மல்லிகைப்பூ விலை
ADDED : செப் 19, 2011 01:16 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மல்லிகை பூ மார்கெட்டில் மல்லிகை மற்றும்
முல்லை பூக்களின் விலை திடீரென உயர்கிறது.சத்தியமங்கலம் பகுதியில் 25
ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். ஐந்தாயிரம் ஏக்கர்
பரப்பில் முல்லை பூ பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் மல்லிகை பூ
சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விவசாயிகள் மல்லிகை பூ
மார்கெட்டுக்கு கொண்டு வந்து, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.பின்
இந்த மல்லிகை பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற
பகுதிக்கு அனுப்பப்படுகிறது. தவிர வேன் மூலம் பெங்களூரு மற்றும்
மைசூருக்கும், விமானம் மூலம் மும்பைக்கும் அனுப்பப்படுகிறது. முகூர்த்த
நேரத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,500 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
தற்போது இதன் விலை மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ
மல்லிகை பூ 30 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.இதனால் மல்லிகை பூ
மார்கெட்டில் வாங்கி, அதை கட்டி, வீதி, வீதியாக கொண்டு சென்று விற்பனை
செய்யும் சிறு வியாபாரிகள், மல்லிகை பூ விலையில் தடுமாற்றம் உள்ளதால்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிய பூவை, பெண்கள் விலை குறைத்து
கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் துவங்கியது
இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாகும், என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுபோல, முல்லை பூ கிலோ ஒன்று 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.