/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குண்டும், குழியுமான ரோடுகளால் மக்கள் தவிப்புகுண்டும், குழியுமான ரோடுகளால் மக்கள் தவிப்பு
குண்டும், குழியுமான ரோடுகளால் மக்கள் தவிப்பு
குண்டும், குழியுமான ரோடுகளால் மக்கள் தவிப்பு
குண்டும், குழியுமான ரோடுகளால் மக்கள் தவிப்பு
ADDED : செப் 11, 2011 11:15 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள ரோடுகள் குண்டும், குழியமாகவும், கிடங்குகளாகவும் இருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட்- நாடார் சிவன் கோயில் வழியாகத்தான் தூத்துக்குடி, மதுரை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், பந்தல்குடி, சாயல்குடி உட்பட பல ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. இதில் நாடார் சிவன் கோயில் பகுதியில் உள்ள ரோடு மிகவும் மோசமடைந்து கிடங்குகளாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் ரோடுகள் மேலும் மோசமடைந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரோடு அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவில்லை. ரோட்டில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கிடங்குகளில் விழுந்து விபத்துள்ளாகின்றனர். கார்கள், மினி வேன்கள் ரோட்டில் செல்ல முடியவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: நாடார் சிவன் கோயிலிருந்து 300 மீட்டர் தூரம் வரையுள்ள ரோடு 15 லட்சம் செலவில் சிமென்ட் பிளாக் பதிக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் பணி துவங்கி விடும், என்றார்.