Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் சிக்னல் அருகே மின் ஒயர் அறுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் சிக்னல் அருகே மின் ஒயர் அறுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் சிக்னல் அருகே மின் ஒயர் அறுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் சிக்னல் அருகே மின் ஒயர் அறுந்ததால் பரபரப்பு

ADDED : ஆக 28, 2011 11:15 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் சிக்னல் பகுதியில் உயர் அழுத்த மின் ஒயர் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே உள்ள தலைமை மின் நிலையத்திலிருந்து விழுப் புரம் நகரம், ரயில்வே லைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நடக்கிறது.

இந்த மின் நிலையத்திலிருந்து நேருஜி ரோடு வழியாக நகர் பகுதிக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார ஒயர் நேற்று மதியம் 1 மணிக்கு திடீரென அறுந்து, மெயின் ரோட்டில் விழுந்தது. உயர் அழுத்த மின்சார ஒயர் நான்கு முனை சந்திப்பு சாலையின் மையத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி, மின் துறைக்குத் தகவல் கொடுத்தனர். மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், உதவி பொறியளாளர் சுரேஷ் மேற்பார்வையில் அறுந்து விழுந்த இடத்தில் புதிய மின் ஒயரை இணைத்தனர். இதனால் நகரில் ஒரு மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us