/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூலை 28, 2011 09:27 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி, கோவை குமரகுரு பொறியியல்
கல்லூரி,பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்வி கழகம் மற்றும்
சிங்கப்பூர் மேலாண்மை வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு கடந்த
1956 முதல் தொடர்ந்து தொழிற்கல்வி அளித்து வருகிறது. புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம், சக்தி கல்வி குழும நிறுவனங்களில்
தற்போதுள்ள பாடப்பிரிவுகளை அங்கீகரிப்பதுடன், சிங்கப்பூரில் உள்ள மேலாண்மை
வளர்ச்சி நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து
கற்கவும், வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும். தற்போதுள்ள பட்டய
படிப்புகளையும், நவீன பட்டய படிப்புகளையும் இணைந்து அமல்படுத்தலாம்.
மாணவர்களின் வளர்ச்சிக்கான பாடத்திட்டங்களை இரு நிறுவனத்தாரும் பகிர்ந்து
கொள்ளவும், மேற்பார்வை செய்வதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். இங்குள்ள
மாணவர்கள் சிங்கப்பூரில் மேலாண்மை வளர்ச்சி நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் கள
ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த தகவலை சக்தி தகவல் தொடர்பியல்,
மேலாண்மை கல்வி கழகத்தின் முதன்மை அதிகாரி ராஜீவ் காமினேனி தெரிவித்தார்.


