/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.19.5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்ரூ.19.5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.19.5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.19.5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ரூ.19.5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 11, 2011 02:49 AM
அந்தியூர்: அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட நகலூர் பஞ்சாயத்தில் 18 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கவும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டும் பணியும் துவக்கப்பட்டன.
அந்தியூர் யூனியன் நகலூர் பஞ்சாயத்து அலுவலக சுற்றுச்சுவர் கட்ட, பொது நிதியில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பஞ்சாயத்துக்குட்பட்ட குண்டுபுளியாமரத்திலிருந்து கொண்டையம்பாளையம் வரையிலான 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கலெக்டர் சிறப்பு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், நகலூர் பஞ்சாயத்து தலைவர் வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணிதரன் பணிகளை துவக்கி வைத்ததுடன், அப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். சேர்மன் அய்யம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், பேரவை இணை செயலாளர் முனுசாமி நாயுடு, சின்னத்தம்பிபாளையம் பஞ்சாயத்து தலைவர் சின்னமாரநாயக்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.