Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தே.மு.தி.க., வேட்பாளர் எங்கே?தியாகதுருகத்தில் பரபரப்பு

தே.மு.தி.க., வேட்பாளர் எங்கே?தியாகதுருகத்தில் பரபரப்பு

தே.மு.தி.க., வேட்பாளர் எங்கே?தியாகதுருகத்தில் பரபரப்பு

தே.மு.தி.க., வேட்பாளர் எங்கே?தியாகதுருகத்தில் பரபரப்பு

ADDED : அக் 14, 2011 01:39 AM


Google News
தியாகதுருகம் : ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் கணவரை அ.தி.மு.க.,வினர் கடத்தியதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான எஸ்.ஒகையூரில் அ.தி. மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் மனைவி பச்சையம்மாள் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் முத்துசாமி, தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய விவசாய அணி செயலர் விஜயபாலகிருஷ்ணன், 35, மனைவி கோகிலா போட்டியிடுகின்றனர்.கடந்த 8ம் தேதி தே.மு.தி.க., வேட்பாளர் கோகிலாவின் கணவர் விஜயபாலகிருஷ்ணன் திடீரென காணாமல் போனார். இது பற்றி தே.மு.தி.க., மாவட்ட செயலர் வெங்கடேசன் எம். எல்.ஏ., கூறுகையில், 'தேர்தல் வேலைகளை தடுத்து பிரசாரம் செய்ய விடாமல் விஜய பாலகிருஷ்ணனை அ.தி.மு.க.,வினர் கடத்தி வைத்துள்ளனர். இதைக்கண்டித்து உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்' என்றார். இக்குற்றச்சாட்டு குறித்து அ.தி.மு.க., ஒன்றிய செயலர் வைத்திலிங்கம் கூறுகையில்,'தேர்தலில் போட்டியிட்டு பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாமென கோகிலா கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஜய பாலகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார் என்றார். இதுபற்றி வேட்பாளர் கோகிலாவிடம் கேட்டபோது, 'கணவருக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்கியிருக்கலாம்' என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us