/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலில் 4 தலைவர்கள் போட்டியின்றி தேர்வுரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலில் 4 தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலில் 4 தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலில் 4 தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ரிஷிவந்தியம் ஒன்றிய தேர்தலில் 4 தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 04, 2011 11:07 PM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 4 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சி தலைவர் பதவிக்கு 245 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 56 பேர் வாபஸ் பெற்றனர். யால் ஊராட்சிதலைவர் பதவிக்கு பாண்டியன், எடுத்தனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு அகிலாண்டம், பாவந்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூங்கோதை, முட்டியம் ஊராட்சி தலைவர் பதவிக்கு அருணகிரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் யால் ஊராட்சியில் தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 4 ஊராட்சிகள் தவிர்த்து 49 ஊராட்சிகளில் 173 பேர் ஊராட்சி தலைவர் பதவிக்கு இறுதியாக போட்டியிடுகின்றனர். இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு 17 பேர் மனுதாக்கல் செய்தனர். 4 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். மொத்தம் 13 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 143 பேர் மனுதாக்கல் செய்தனர். 2 மனுக்கள் தள்ளுபடியானது. 11 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். மொத்தம் 130 பேர் போட்டியிடுகின்றனர்.ஒன்றியத்தில் உள்ள 426 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,311 பேர் மனுதாக்கல் செய்தனர். 7 மனுக்கள் தள்ளுபடியானது. 203 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 1103 பேர் போட்டியிடுகின்றனர்.இதில், பெரியகொள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட புஷ்பகிரி கிராமத்தில் உள்ள 1 வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. கடந்த தேர்தலில் 2 வார்டுகளாக இருந்த இக்கிராமத்தில் இந்த தேர்தலில் ஒரு வார்டாக குறைத்ததால் அதிருப் தியடைந்த மக்கள் போட்டியிட விரும்பாமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இங்கு மொத்தம் 460 வாக்காளர்கள் உள்ளனர்.


