/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஓட்டுப் போட போறீங்களா?14 ஆவணங்களில் ஒன்றைகொண்டு வாங்க: கலெக்டர்ஓட்டுப் போட போறீங்களா?14 ஆவணங்களில் ஒன்றைகொண்டு வாங்க: கலெக்டர்
ஓட்டுப் போட போறீங்களா?14 ஆவணங்களில் ஒன்றைகொண்டு வாங்க: கலெக்டர்
ஓட்டுப் போட போறீங்களா?14 ஆவணங்களில் ஒன்றைகொண்டு வாங்க: கலெக்டர்
ஓட்டுப் போட போறீங்களா?14 ஆவணங்களில் ஒன்றைகொண்டு வாங்க: கலெக்டர்
ADDED : செப் 28, 2011 01:02 AM
நாமக்கல்: 'உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட வரும் வாக்காளர்கள், தேர்தல்
கமிஷன் அறிவுறுத்தியுள்ள, 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வரவேண்டும்'
என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட
அறிக்கைவாக்காளர் அடையாள அட்டை, பார்ஸ்போர்ட், இந்தாண்டு மே மாதம் வரை
வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, மத்திய, மாநில அரசு
பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்பு, பொது வரையறுக்கப்பட்ட
குழுமங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட
போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, மே மாதம் 31ம் தேதிக்கு முன் வழங்கப்பட்ட
வங்கிக் கணக்கு, அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்கியதற்கு வழங்கப்பட்ட
போட்டோவுடன் கூடிய பாஸ் புக், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவ விதவை
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவை கொண்டுவர வேண்டும்.மேலும்,
போட்டோவுடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய
பத்திரங்கள் போன்ற சொத்து ஆவணம், போட்டோவுடன் கூடிய எஸ்.சி.,- எஸ்.டி.,
மறறும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்று, துப்பாக்கி லைசென்ஸ், மே
மாதம் வரை வழங்கப்பட்ட உடல் ஊனமுற்றோர் சான்று, போட்டோவுடன் கூடிய சுகாதார
பாதுகாப்பு திட்ட அட்டை உள்ளிட்ட ஆவணம் கொண்டுவரவேண்டும்.தேர்தல் கமிஷனால்
வழங்கப்பட்ட ஓட்டுச்சாவடி அனுமதி சீட்டு வைத்திருக்கும் வாக்காளர்கள்,
மேற்குறிப்பிட்ட ஆவணம் எதுவும் காண்பிக்க தேவையில்லை.