Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஏஐடியுசி., தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்

தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஏஐடியுசி., தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்

தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஏஐடியுசி., தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்

தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஏஐடியுசி., தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம்

ADDED : செப் 28, 2011 12:43 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் புதிய தொழிலாளர்களை பணிநிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஏஐடியுசி., போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏஐடியுசி., அரசுப்போக்குவரத்து தொழிலாளர் சங்க நெல்லை மண்டல 12வது மாநாடு பாளை. யில் நடந்தது. ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொருளாளர் சுவாமிநாதன் மாநாட்டு கொடி ஏற்றினார். சங்கத்தலைவர் குருசாமி, உதவித்தலைவர்கள் சங்கரலிங்கம், சுப்பிரமணியன், முத்துசாமி, நீராவி, சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தனர்.

செயலாளர் உலகநாதன் வரவேற்றார். சம்மேளன தலைவர் செல்வராஜ் துவக்கிவைத்தார். பொதுச்செயலாளர் ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் சங்கரநாராயணன் வரவு, செலவு அறிக்கை அளித்தார்.



சம்மேளன பொதுச்செயலாளர் லட்சுமணன், ஏஐடியுசி., மாநில துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், சங்க செயலாளர் முருகன், தீர்மானங்கள் குழுத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர்கள் வின்சென்ட், சண்முகம், சுடலைமுத்து, இந்திய கம்யூ., மாவட்டச்செயலாளர் சண்முகவேல், சட்ட ஆலோசகர் கணபதி சுப்பிரமணியன், விருதுநகர் சங்க பொதுச்செயலாளர் பாண்டியன், நாகர்கோவில் பொதுச்செயலாளர் தயானந்தன் உட்பட பலர் பேசினர்.



ஓய்வூதியத்திட்டத்திற்கு அரசு பொறுப்பு ஏற்பது, நெல்லை கோட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அரசு நிதி வழங்குவது, ஜப்தி பஸ்களை மீட்க நடவடிக்கை எடுப்பது, தற்காலிக பணிநிறுத்தம் செய்யப்பட்ட சேம ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது, புதிதாக நியமனம் பெற்றவர்களை 240 நாட்களில் பணிநிரந்தரப்படுத்துவது, போதுமான தொழில்நுட்ப, அலுவலக பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருப்பசாமி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us