தொழில் அதிபர்கள் சந்திப்பு கருத்தரங்கு
தொழில் அதிபர்கள் சந்திப்பு கருத்தரங்கு
தொழில் அதிபர்கள் சந்திப்பு கருத்தரங்கு
ADDED : செப் 27, 2011 06:30 PM
கோவை: பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை வேலாண்மை துறை சார்பில், 'தொழில் அதிபர்கள் சந்திப்பு' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். மாணவி சந்தியா வரவேற்றார். மாணவர் சம்பத் நன்றி கூறினார். ஏ.பி., குழுமத்தின் தலைவர் ஆனந்த் பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று,'தனது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் தொழில் முனைவோர் ஆவதற்கான வழிவகைகளையும், வியாபாரம் மற்றும் வாழ்க்கை பண்பாடுகள்' குறித்து பேசினார்.
ரத்தினம் இன்ஜினியரிங் கல்லூரியில்,'பொறியாளர் தினம்' கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். துணை முதல்வர் விஜயன், முதன்மை நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை (சுற்றுச்சூழல்) நிர்வாக பொறியாளர் இளங்கோவன், 'மாணவ, மாணவிகள் பொறியியல் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் வல்லுநர்கள் தொழில்நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலும், சிந்தனையும் அதிகமாக இருக்க வேண்டும். புதியதாக உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் அமைய வேண்டும்', என பேசினார்.