/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேர்தலை புறக்கணிக்க முடிவு: ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனுதேர்தலை புறக்கணிக்க முடிவு: ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு
தேர்தலை புறக்கணிக்க முடிவு: ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு
தேர்தலை புறக்கணிக்க முடிவு: ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு
தேர்தலை புறக்கணிக்க முடிவு: ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு
ADDED : செப் 26, 2011 10:27 PM
விருத்தாசலம் : குப்பநத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று ஆர்.டி.ஓ., ஆனந்தகுமாரிடம் கொடுத்துள்ள மனு: நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் குப்பநத்தம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக உள்ளவரே மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். இதனால் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கும் வகையில் வேறு கிராமத்தில் வசிக்கும் வகையில் இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.