/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பகவான் திருவடிகளை சரணடைந்தால் செல்வம் வந்து சேரும்பகவான் திருவடிகளை சரணடைந்தால் செல்வம் வந்து சேரும்
பகவான் திருவடிகளை சரணடைந்தால் செல்வம் வந்து சேரும்
பகவான் திருவடிகளை சரணடைந்தால் செல்வம் வந்து சேரும்
பகவான் திருவடிகளை சரணடைந்தால் செல்வம் வந்து சேரும்
ADDED : செப் 25, 2011 01:08 AM
திருப்பூர் :பகவான் திருவடிகளைசரணடைந்தால், செல்வம் தானாக வந்து சேரும் என, ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:கிளிகொத்திய பழத்துக்கு ருசி அதிகம் என்பார்கள்.
அதுபோல், சுகர் என்னும் கிளி பரிட்சித்து மன்னனுக்கு பழமாகிய வேதத்தை ஆங்காங்கே கொத்தி, கொடுத்துள்ள பாகவதம் என்கிற கனிக்கு ருசி அதிகம்.சாந்தீபர் எனும் ரிஷியின் பாடசாலையில் குசேலனும், பகவான் கிருஷ்ணரும் சீடர்களாக கல்வி பயின்றனர். குசேலன் என்றாலே கிழிந்த துணி என்றுபொருள்; பெயருக்கு ஏற்ப குசேலன் ஏழ்மையாக இருந்தார். ஒருநாள் கிருஷ்ணனும், குசேலனும் விறகு பொறுக்குவதற்காக காட்டுக்கு சென்றனர். திடீரென பலத்த மழை கொட்டியது; அதை பொருட்படுத்தாமல், சிறுவர்கள் இருவரும் விறகு சேகரித்து கொண்டிருந்தனர்.வெகுநேரமாகியும் சிறுவர்கள் இருவரும் திரும்பாததால் கவலையடைந்த சாந்தீபர், அவர்களை தேடி காட்டுக்கு சென்றார்; சிறுவர்கள் மழையில் நனைந்தபடி விறகுபொறுக்குவதை பார்த்து, உள்ளம் நெகிழ்ந்தார். குசேலனையும், கிருஷ்ணனையும் ஆத்மார்த்தமாக தழுவிகொண்டு, கடும் மழையையும் பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக இருந்ததால், 'குசேலன், கிருஷ்ணன் இருவரும் செல்வச் செழிப்போடு, எப்போதும் நண்பர்களாக இருப்பீர்கள்' என்று சாந்தீப ரிஷி வரம் கொடுத்தார்.நாட்கள் நகர்ந்தன; குருகுலவாசம் முடிந்து குசேலன், கிருஷ்ணன் இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். கிருஷ்ணர் செல்வ செழிப்போடு, துவாரகையை ஆட்சி செய்தார். குசேலனின் குடும்பம் வறுமையில் வாடியது. ஒருநாள் குசேலனின் மனைவி, 'பால்ய நண்பன் கிருஷ்ணரிடம் கேட்டால், வேண்டியதை கொடுப்பார்; வறுமை நீங்கும்,' என்றாள்; இதைகேட்ட குசேலன், 'கிருஷ்ணனை சந்திக்க போகும் போது, அவனுக்கு கொடுக்க, நம்மிடம் ஏதும் இல்லையே,' என்று வருந்தினார்.அக்கம்பக்கத்து வீடுகளில் யாசித்து 'அவல்' சேகரித்து, துணியில் முடிந்து, குசேலன் கையில் கொடுத்தாள் மனைவி. அவலை இடுப்பில் செருகிகொண்டு குசேலர், துவாரகை வந்தடைந்தார். குசேலன் வந்த செய்திகேட்டதும் அரியணையில் இருந்து குதித்து, நண்பனை காண ஓடோடி வந்தார் பகவான் கிருஷ்ணர். குசேலனை மார்போடு தழுவிகொண்டு, அரண்மனைக்குள் அழைத்து வந்தார்.பால்ய பருவத்து நினைவுகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர். 'குசேலா, உனக்கு என்னவேண்டுமோ, கேள்.' என்றார், கிருஷ்ணன். அவரின் அன்பை பார்த்த குசேலனால் பொன் பொருள் ஏதும் கேட்காமல், 'கண்ணா நான் உன்னை பார்க்கவே வந்தேன். எனக்கு ஏதும் வேண்டாம்,' என்றார். உடனே கிருஷ்ணர், ' என்னை பார்க்க வந்துள்ளாயே, எனக்கு என்ன கொண்டுவந்தாய்', என்று கேட்க, குசேலன், தான் கொண்டுவந்த 'அவலை' எடுத்து கொடுக்க தயங்கினார்.குசேலனின் இடுப்பில் இருந்த அவலை பிடித்து இழுத்து எடுத்து, ஆர்வமுடன் கிருஷ்ணர் சாப்பிட்டார்; கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்த குசேலன், கண்ணீரால் அவர் பாதத்தைகழுவினார்.மறுகணமே குசேலனின் வீடு மாளிகையானது, பொன்பொருள் பெற்ற செல்வந்தன் ஆனான்; குசேலனுக்கு இந்திர பட்டமும் கிடைத்தது. பகவானுக்கு நாம் எதையும் கொடுக்கவேண்டியது இல்லை; அவனது திருவடிகளை சரணடைந்தால் போதும், அனைத்து செல்வங்களும் தானாக, நம்மை வந்துசேரும். இவ்வாறு வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.