Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சர்க்கரை நோயாளிகள் விரதம்? கருத்தரங்கில் டாக்டர்கள் விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் விரதம்? கருத்தரங்கில் டாக்டர்கள் விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் விரதம்? கருத்தரங்கில் டாக்டர்கள் விளக்கம்

சர்க்கரை நோயாளிகள் விரதம்? கருத்தரங்கில் டாக்டர்கள் விளக்கம்

ADDED : செப் 23, 2011 01:08 AM


Google News

தேனி : தேனி ஸ்ரீமோகன் ஆஸ்பத்திரியின் தேனி சர்க்கரை நோய் மையத்தின் சார்பில் சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கலாமா என்பது குறித்த கருத்தரங்கு நடந்தது.

மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் குமரவேல் பேசினார். மோகன் ஆஸ்பத்திரி சர்க்கரை நோய் டாக்டர் மோகன வெங்கட்ராமன் வரவேற்றார். தமிழ்நாடு மருத்துவக் கழக தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தேனி சர்க்கரை நோய் மையத்தின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் அறவாழி உட்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டதாவது: சர்க்கரை நோயாளிகள் விரதம் இருக்கும் போது, தாழ்நிலை சர்க்கரை, சுய நினைவு இழத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சியை மாலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். காலை மட்டும் சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இரவு உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம். காலை, மாலை மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், காலையில் பாதி, இரவில் முழு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். மூன்று வேலை மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் காலையில் ஒரு பங்கும், இரவில் இரண்டு பங்கும் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இன்சுலின் ஊசி போடுபவர்கள் காலையில் வழக்கமான அளவில் பாதியும், மாலையில் வழக்கமான அளவும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us