/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நகராட்சி, பேரூராட்சிகளில் பெண் வாக்காளர் அதிகம் உள்ளாட்சி தேர்தல் முடிவுநகராட்சி, பேரூராட்சிகளில் பெண் வாக்காளர் அதிகம் உள்ளாட்சி தேர்தல் முடிவு
நகராட்சி, பேரூராட்சிகளில் பெண் வாக்காளர் அதிகம் உள்ளாட்சி தேர்தல் முடிவு
நகராட்சி, பேரூராட்சிகளில் பெண் வாக்காளர் அதிகம் உள்ளாட்சி தேர்தல் முடிவு
நகராட்சி, பேரூராட்சிகளில் பெண் வாக்காளர் அதிகம் உள்ளாட்சி தேர்தல் முடிவு
ADDED : செப் 21, 2011 10:55 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி நகராட்சிகளிலும், 23 பேரூராட்சிகளில் 17 பேரூராட்சிகளிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.செப்., 15 ல் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் முடிவடையாததால், செப்.,19 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஒரு வழியாக..: அன்றும் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒரு வழியாக நேற்று முன்தினம் மாலை, வெளியிடப்பட்டு, நேற்று முதல், நகராட்சி, ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.ஆர்வம்: தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள், மனுத்தாக்கலின் போது அவர்களுக்கு முன்மொழிபவர்கள், பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பகுதி எண், வார்டு ஆகியவற்றை ஆர்வமுடன் குறித்து செல்கின்றனர்.முதலிடம்: திண்டுக்கல், பழநி நகராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகம். கொடைக்கானல் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 24 பேர் அதிகம். இதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 176 ஆண்கள் மட்டுமே அதிகம்.
இங்குள்ள 23 பேரூராட்சிகளில் 17 ல், பெண் வாக்காளர்கள் அதிகம். பாளையம், அம்மையநாயக்கனூர், சித்தையன்கோட்டை, பண்ணைக்காடு, எரியோடு, அய்யலூர் பேரூராட்சிகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஆண்கள் அதிகம் உள்ளனர்.