Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும்பாரதீய நகைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும்பாரதீய நகைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும்பாரதீய நகைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும்பாரதீய நகைத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

ADDED : செப் 21, 2011 01:04 AM


Google News
தூத்துக்குடி: ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரதீய நகைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட பாரதீய நகைத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; தொழில்கடவுள் விஸ்வகர்மாவின் ஜெயந்தி தினத்தை தொழிலாளர் தினமாக அறிவிக்க வேண்டும். பாரம்பரியமிக்க நகைத் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திட தொழிற்கூடங்களுக்கு வழங்கப்படும் குடிசை தொழில் சான்றிதழ் பெற்றிட துறை சார்ந்த பதிவு பெற்ற தொழில் சங்கத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொற்கொல்லர் நல வாரியத்தில் பதிவுபெற்ற அனைத்து நகைத் தொழிலாளர்களுக்கும் இலவசமாக தொழில் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பொற்கொல்லர் வாரியத்தில் 5 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற அனைத்து தொழிலாளர்களும், தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா பாங்க் கடன் தொழிலாளர் நலவாரியம் மூலம் வழங்க வேண்டும். துறை சார்ந்த பதிவுபெற்ற தொழில் சங்கத்தின் பரிந்துரை மற்றும் பொற்கொல்லர் வாரிய அட்டை பெற்ற நகைத் தொழிலாளர்களுக்கு முன்வைப்பு தொகையின்றி பிஐஎஸ்.,ஹால்மார்க் முத்திரையை வழங்க வேண்டும். பொற்கொல்லர் நலவாரிய அட்டையை அத்தொழிலாளர்கள் தொழிற்சான்றாக அரசு அங்கீகரிக்க வேண்டும். பாரம்பரிய நகைத் தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட தொழில் வாய்ப்பு மற்றும் மறுக்கப்படும் தொழில் வாய்ப்பும் மீண்டும் கிடைக்கப்பெற அவர்கள் வாழ்க்கை வளம் பெற அரசு தங்க வர்த்தகத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மொத்த வியாபாரம் என்ற பெயரில் தேசத்திற்கும், அரசுக்கும் உண்டாகும் வருமான இழப்பு, வரி ஏய்ப்பு ஏற்படுத்தும் உரிய ஆவணங்கள் இல்லாத நடமாடும் வியாபாரிகள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தக சூதாட்ட முறையை ரத்து செய்ய வேண்டும். நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளுக்கு உற்பத்தி வரி ஏற்படுத்தி அதில் இருந்து 2 சதவீத வரிப்பணத்தை பொற்கொல்லர்களின் நலனுக்காக பொற்கொல்லர் நல வாரியத்திற்கு வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரிய அலுவலக பணிகளை விரைந்து நடத்திட போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us