Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வால்பாறையில் தொழிலாளர்கள் பீதி

குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வால்பாறையில் தொழிலாளர்கள் பீதி

குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வால்பாறையில் தொழிலாளர்கள் பீதி

குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா வால்பாறையில் தொழிலாளர்கள் பீதி

ADDED : செப் 20, 2011 11:44 PM


Google News
வால்பாறை : வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளிலுள்ள தேயிலை தோட்டங்களில், சமீபகாலமாக காட்டு யானைகள் பகல் நேரத்திலேயே முகாமிட்டு வருகின்றன. இதனால், தேயிலை பறிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இரவு நேரத்தில், தொழி லாளர் குடியிருப்பு பகுதிக்கு புகுந்து சேதம் விளைவித்து வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ள சோலையாறு முதல் பிரிவில்,நேற்று காலை 5.00 மணிக்கு ஒரு குட்டியுடன் ஒன்பது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் திடீரென முகாமிட்டன. தொடர்ந்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானைகள் அப்பகுதியிலேயே உலா வந்ததால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில்,''காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாதவாறு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளை மக்கள் துன்புறுத்த வேண்டாம். யானைகள் கூட்டமாக நிற்கும் இடத்தில் பார்வையாளர்கள் அருகில் செல்ல வேண்டாம். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்

படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us