/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சுங்குவார்சத்திரத்தில் நிதி பற்றாக்குறை: குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்சுங்குவார்சத்திரத்தில் நிதி பற்றாக்குறை: குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
சுங்குவார்சத்திரத்தில் நிதி பற்றாக்குறை: குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
சுங்குவார்சத்திரத்தில் நிதி பற்றாக்குறை: குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
சுங்குவார்சத்திரத்தில் நிதி பற்றாக்குறை: குளம் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
ADDED : செப் 20, 2011 12:34 AM
ஸ்ரீபெரும்புதூர் : சுங்குவார்சத்திரம் செல்வ விநாயகர் கோவில் குளத்தை, சீரமைக்கும் பணி, நிதி இல்லாததால், பாதியில் நிறுத்தப்பட்டது.சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அமைந்துள்ளது.
இது, திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது. சுங்குவார்சத்திரத்தில், தேசிய நெடுஞ்சாலை அருகே, செல்வ விநாயகர் கோவில் உள்ளது.கோவிலுக்கு பின்புறம், 1.26 ஏக்கர் பரப்பளவில், குளம் அமைந்துள்ளது. இக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இக்குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும், என கடந்த நவம்பர் மாதம், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, குளத்து நீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. குளத்திலிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன. ஆனால், குளத்திலிருந்த சேற்றை வாரவில்லை. நிதி வசதி இல்லாததால், குளத்தை சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் போதிய நிதி ஒதுக்கி, குளத்தை தூர் வாருவதோடு, குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, திருமங்கலம் ஊராட்சித் தலைவர் தனலட்சுமி தயாளன் கூறும்போது, 'ஊராட்சியில் நிதி இல்லை. குளத்தை சீரமைக்க, 20 லட்சம் ரூபாய் தேவைப்படும். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளேன். நிதி கிடைத்தவுடன் குளம் சீரமைக்கப்படும்' என்றார்.
ஜெ.ரவி


