Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஏ.டி.எம்.,மையத்தில் திருடர்கள் பணம் எடுப்போர் உஷார்

ஏ.டி.எம்.,மையத்தில் திருடர்கள் பணம் எடுப்போர் உஷார்

ஏ.டி.எம்.,மையத்தில் திருடர்கள் பணம் எடுப்போர் உஷார்

ஏ.டி.எம்.,மையத்தில் திருடர்கள் பணம் எடுப்போர் உஷார்

ADDED : செப் 19, 2011 10:41 PM


Google News

தேனி : ஏ.டி.எம்.,மையத்தில் பணம் எடுப்போரை ஏமாற்றும் சம்பவம் தேனியில் தொடர்கிறது.ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்போரிடம் கார்டுகளை மாற்றி பணத்தை எடுக்கும் கும்பல் தனி நெட்ஒர்க் அமைத்து செயல்படுகிறது.தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த மில் தொழிலாளி நவநீதகிருஷ்ணன், 50.தேனியில் உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அங்கிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுப்பதுபோல் பாவனை காட்டினார்.தனது கார்டு மூலம் பணம் எடுக்கமுடியவில்லை. உங்கள் கார்டை கொடுங்கள், முயற்சி செய்து பார்க்கலாம் என வாங்கினார். ரகசிய எண்ணையும் கேட்டு பணம் எடுத்து கொடுத்தார். அவரது கார்டிற்கு பதில் டூப்ளிகேட் கார்டை கொடுத்துள்ளார். இதை கவனிக்காமல் வீட்டிற்கு சென்ற நவநீதகிருஷ்ணன் மீண்டும் பணம் எடுக்க முயன்றார். ஏ.டி.எம்., கார்டு போலி என தெரிய வந்தது. வங்கியில் விசாரித்தபோது, அவரது கணக்கில் இருந்து ரூ. 24 ஆயிரத்து 500 ரூபாய் மர்ம நபர் ஏ.டி.எம்., கார்டு மூலம் எடுத்தது தெரிய வந்தது.தனிப்படை: கடந்த சில நாட்களுக்கு முன் தேவாரத்தை சேர்ந்த விவசாயியிடம் ரூ. 25 ஆயிரம் இதேபோல் மோசடி செய்யப்பட்டது. இக்கும்பலை கண்டுபிடிக்க தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us