/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அன்னை அற்புதம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்அன்னை அற்புதம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
அன்னை அற்புதம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
அன்னை அற்புதம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
அன்னை அற்புதம் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : செப் 18, 2011 01:07 AM
நாமக்கல்: நாமக்கல், அன்னை அற்புதம் நர்சிங் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லூரி நிர்வாக இயக்குனர் பார்த்திபன் தலைமை வகித்தார்.
நிர்வாக உதவி இயக்குனர் உமா பார்த்திபன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். 'அன்னை அற்புதம் நர்சிங் கல்லூரி, தீப்தி மருத்துவமனையின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. அதன் சேர்க்கை முடிவுறும் தருவாயில் உள்ளது. நர்சிங கல்லூரியில் படித்தவருக்கும், அரசு வேலை என, தமிழக அரசு இந்தாண்டு அறிவித்துள்ளது. இந்த படிப்புக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. மேலும், இந்தாண்டு கல்லூரியின் புதிய கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., நர்சிங் புதிய கல்லூரி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என, நிர்வாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார். உதவி பேராசிரியர்கள் பிருந்தா, சுகந்தி உட்பட மாணவியர், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.


