Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வழக்கறிஞரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

வழக்கறிஞரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

வழக்கறிஞரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

வழக்கறிஞரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

ADDED : செப் 15, 2011 03:39 AM


Google News
விழுப்புரம்:வழக்கறிஞரை மிரட்டியதாக நான்குபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியில் வசிப் பவர் லூசியா,48. வழக்கறிஞரான இவரது வீட்டில் செஞ்சியை சேர்ந்த அஞ்சலாபிரஜ்ஜித் என்ற பெண் தங்கியுள்ளார். இந்த பெண் தன்னை செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்த மோகன்,35, என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி போலீசில் பதிவான இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் லூசியா ஆஜராகி வரு கிறார். இந்நிலையில் மோகன், அவரது நண்பர்கள் விஜய், கார்த்திக், ரதிமாதா நான்குபேரும் நேற்று முன்தினம் லூசியா வீட்டிற்கு சென்று புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மோகன் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us