/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/யாருடன் கூட்டணி காங்., நிர்வாகிகள் விவாதம்யாருடன் கூட்டணி காங்., நிர்வாகிகள் விவாதம்
யாருடன் கூட்டணி காங்., நிர்வாகிகள் விவாதம்
யாருடன் கூட்டணி காங்., நிர்வாகிகள் விவாதம்
யாருடன் கூட்டணி காங்., நிர்வாகிகள் விவாதம்
ADDED : செப் 11, 2011 12:41 AM
திருவண்ணாமலை: யாருடன் கூட்டணி என்பது குறித்து, காங்கிரஸ் கட்சி சார்பில்
நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாறுபட்ட விவாதங்கள் நடந்ததால், பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.செங்கத்தில், காங்கிரஸ் கடசி சார்பில உள்ளாட்சி தேர்தல் குறித்த
ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, செங்கம் யூனியன் சேர்மன் குமார்
தலைமை வகித்தார். மாநில சேவாதள அமைப்பு செயலாளர் ராஜசேகர், நகர செயலாளர்
சர்தார் கலிமுல்லா, மாவட்ட செயலாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யூனியன் சேர்மன் குமார் பேசியதாவது:வரும் உள்ளாட்சி தேர்தலில்
தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போகிறோம், எனவே வரும் உள்ளாட்சி
தேர்தலில் முழு மூச்சுடன் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும்
அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.திருவண்ணாமலை
மாவட்டத்தில், செங்கம் பகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்கி வருகிறது, இவை,
தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். எனவே, மீண்டும் செங்கம் காங்கிரஸ்
கோட்டை என்பதை நிரூபிக்க, செங்கம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவி, வார்டு
உறுப்பினர் பதவியை கைப்பற்ற வேண்டும். மேலும், செங்கம் பஞ்சாயத்து யூனியன்
சேர்மன் பதவியை மீண்டும் கைப்பற்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து
பணியாற்ற வேண்டும்.மாநில சேவாதள அமைப்பு செயலாளர் ராஜசேகர் பேசுகையில்,''
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைத்து வார்டிலும் போட்டியிட
ஆர்வம் செலுத்துவது போல், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அனைத்து
வார்டுகளிலும் போட்டியிட தயாராக வேண்டும்,'' என்றார்.
இவரது பேச்சால்
காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போகிறதா என அதில் கலந்து கொண்ட காங்கிரஸ்
நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.நகர செயலாளர் சர்தார் கலிமுல்லா
பேசுகையில்,''உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என, இதுவரை
தலைமை தெளிவான முடிவு எதுவும் கூறவில்லை, தலைமை எந்த கட்சியுடன் சேர்ந்து
போட்டியிட வேண்டும் என்று கூறுகிறதோ அந்த கட்சியுடன் சேர்ந்து உள்ளாட்சி
தேர்தலில் பணியாற்றி வெற்றி வெற வேண்டும்,'' என்றார்.ஒவ்வொரு நிர்வாகியும்
ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை ஒரே மேடையில் பேசியதால், காங்கிரஸ் கட்சியை
சேர்ந்த நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.