இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு
இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு
இட பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு: அ.தி.மு.க., அறிவிப்பு
ADDED : செப் 06, 2011 11:14 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், இடப் பங்கீடு குறித்து, பேச்சு நடத்த, குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.
அ.தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான இடப் பங்கீடு குறித்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், கழகத்தின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், கழகத் தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.