Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் தில்லுமுல்லு : ஆய்வு செய்த, கலெக்டருக்கு பேரதிர்ச்சி

அரசு மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் தில்லுமுல்லு : ஆய்வு செய்த, கலெக்டருக்கு பேரதிர்ச்சி

அரசு மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் தில்லுமுல்லு : ஆய்வு செய்த, கலெக்டருக்கு பேரதிர்ச்சி

அரசு மருத்துவமனை வருகைப்பதிவேட்டில் தில்லுமுல்லு : ஆய்வு செய்த, கலெக்டருக்கு பேரதிர்ச்சி

UPDATED : செப் 04, 2011 11:10 PMADDED : செப் 04, 2011 11:07 PM


Google News
அவிநாசி : அவிநாசி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த கலெக்டர் மதிவாணன், வருகை பதிவேட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

எட்டு டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் மூவர் மட்டுமே பணியில் இருந்தனர். மற்றவர்கள் வார விடுமுறையில் இருப்பதாக, பணியில் இருந்த டாக்டர் கூறியதால், கோபத்தின் உச்சிக்கு சென்றார். அதன்பின், மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் தொடர்பாக அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தினார். அவிநாசி - சேவூர் ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று காலை 10.55 மணிக்கு, கலெக்டர் மதிவாணன், திடீரென்று அம்மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள அனைத்து அறைகளுக்கும் சென்ற கலெக்டர், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பிரசவ வார்டுக்கு சென்று, சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்து கேட்டறிந்தார். வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த அவர், பணியில் இருந்த டாக்டர் மோகன்ராஜிடம், பல டாக்டர்கள் வராதது குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டார். டாக்டர் அளித்த பதிலால் திருப்தியடையாத கலெக்டர், டாக்டரிடம் கூறியதாவது: அவிநாசியில் எட்டு டாக்டர்கள் உள்ளனர். இன்று (நேற்று) மூவர் மட்டுமே பணியில் உள்ளனர். உங்களிடம் கேட்டால், 'ஐந்து பேர் வார விடுமுறையில் சென்றுள்ள னர்,' என்கிறீர்கள். ஒரே சமயத்தில் ஐந்து டாக்டர்களும் சென்று விட் டால், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி யாராவது வந்தால் எவ்வாறு காப்பாற்றுவீர்கள். வருகை பதிவேட்டில் அனைத்து டாக்டர்களின் வருகை சரிவர பதிவு செய்யப்படவில்லை; இதில், பல குளறுபடிகள் உள்ளன. எந்தெந்த உபகரணங்கள் வேண்டுமென்று தெளிவாக சொன்னால் தானே தெரியும். (அப்போது டாக்டர் புஷ்பராணி குறுக்கிட்டு, 'ஸ்கேனர் மிகவும் பழையதாக உள்ளதால், மாற்ற வேண்டும்,' என்றார்.) உயிர் காக்க வேண்டிய டாக்டர், எப்போதும் பணியில் இருக்க வேண்டும். எதைக்கேட்டாலும் 'ஜே.டி., தான் அந்த டாக்டரை திருப்பூருக்கு அனுப்பினார்,' என்று சொன்னால், அது சரியல்ல. இங்கே டாக்டர்கள் பற்றாக்குறை இருக்கும்போது, அங்கே ஏன் அனுப்புகிறீர்கள். அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைகளையும், தேவைகளையும் உடனடி யாக அறிக்கையாக அனுப்புங்கள், என்றார். டாக்டர் மோகன்ராஜ் பதிலளிக்கையில், 'அவரச சிகிக்சைக்கு ரத்தம் கொடுக்க ரத்த வங்கி ஏற் படுத்த வேண்டும். அதேபோல், போஸ்ட்மார்டம் அறைக்கு ஏ.சி., வசதி தேவை. இங்குள்ள டாக்டர்களை, வேறு இடங்களுக்கு இணை இயக்குனரே அனுப்புகிறார். நாங்கள் என்ன செய்வது?,' என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், கலெக்டர் சமாதானம் அடையாமல், மருத்துவமனையின் தற்போதைய நிலை, வசதி, திடீர் ஆய்வு குறித்து அறிக்கை அனுப்புமாறு, ஆர்.டி.ஓ., செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டார்.எம்.எல்.ஏ., கருப்பசாமி கூறுகையில், ''அவிநாசி மருத்துவமனையில் எட்டு டாக்டர்கள் இருந்தும் சரிவர யாரும் வருவதில்லை. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுக் கின்றனர். சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை. இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை, திருப்பூருக்கு செல்லுங்கள் என்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us