ADDED : ஆக 30, 2011 01:58 AM
கொடைக்கானல்:அரசின் இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் நகர், கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஜூன் ல் பள்ளி துவங்கிய உடனேயே இலவச பஸ் பாஸ் பெற்றுத்தரும் பணி மேற்கொள்ளப்படும். இதற்காக பள்ளி தலைமையாசிரியர்கள், போக்குவரத்து துறையிலிருந்து விண்ணப்பங்களை பெற்று மாணவனின் பெயர், போட்டோவுடன் விண்ணப்பிப்பர். தற்போது பள்ளி துவங்கி இரண்டு மாதம் கடந்த நிலையில், மலைப்பகுதியிலுள்ள பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் இதுவரை வழங்கப்படவில்லை.இதனால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சமச்சீர் பாடபுத்தங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பஸ் பாஸ் பெற்றுதரமுடியவில்லை என தலைமையாசிரியர்கள் காரணம் தெரிவிக்கின்றனர்.


