/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்
இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்
இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்
இரு பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2 பேர் காயம்
ADDED : ஆக 29, 2011 11:42 PM
அரூர்: மொரப்பூர் அருகே இரு பைக்கள் மோதியதில், ஒருவர் பலியானார்.
இருவர் படுகாயம் அடைந்தனர். மொரப்பூர் அருகே தாசரஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (53). இவர் நேற்று மொரப்பூரிலிருந்து தாசரஅள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த இருவர் பைக்கில் சிங்காரவேலன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மொரப்பூர் பெருமாள் கோவில் அருகே முருகேசன் சென்று கொண்டிருந்த பைக்கும், எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்தில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மொரப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.