ADDED : ஆக 23, 2011 11:41 PM
சென்னை:பயிற்சி முடித்த புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன.தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு:ஓசூர் உதவி கலெக்டர்
வாத்நெர் பிரசாந்த் முகுந்த், அங்கிருந்து மாற்றப்பட்டு, சிவகாசி உதவி
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட உதவி கலெக்டர் அருண் சுந்தர்
தயாளன், பொள்ளாச்சி உதவி கலெக்டராகவும், கிரன் குறாலா, கடலூர் உதவி
கலெக்டராகவும், என்.வெங்கடேஷ், நாகர்கோவில் உதவி கலெக்டராகவும்,
டி.ஜி.வினய், நாமக்கல் உதவி கலெக்டராகவும், நந்துரி சந்தீப், ஓசூர் உதவி
கலெக்டராகவும், டி.ஆனந்த், திருக்கோவிலூர் உதவி கலெக்டராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.