/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் கடும் வெயிலில் கருகும் கொடுமைகலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் கடும் வெயிலில் கருகும் கொடுமை
கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் கடும் வெயிலில் கருகும் கொடுமை
கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் கடும் வெயிலில் கருகும் கொடுமை
கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் கடும் வெயிலில் கருகும் கொடுமை
ADDED : ஆக 23, 2011 01:13 AM
திருச்சி: 'பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வரும் மக்கள், கடும் வெயிலில் வெந்து, கருகுவதை தடுக்க திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உடனடியாக நிழற்கூரைகள் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேருக்கு மேல் மனு கொடுக்க வரமாட்டார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று, தமிழக முதல்வரானார். முதியோர் உதவித் தொகை உயர்த்தி, பட்டாக்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். அதேபோல, ஸ்ரீரங்கம் தொகுதி மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்துக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், தொடர்ந்து அறிவித்த வண்ணமாகவும் இருக்கிறார். இதனால் புதிய அரசின் மீது திருச்சி மாவட்ட மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட மனுக்களை அளிக்க, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் மும்மடங்காக உயர்ந்துள்ளது. அதிகப்படியாக வரும் மக்களுக்காக, மனுக்களை பதிவுச் செய்ய கூடுதல் கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. கவுன்டர்களுக்கு செல்ல வரிசையில் நிற்கும் மக்களுக்கு ஏதுவாக நிழற்கூரைகள் அமைக்கப்பட்டது. ஆனால், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வழக்கத்தை விட அதிகமான மக்கள் பங்கேற்றனர். மனு கொடுப்பவர்களுடன், 'சும்மா' வேடிக்கை பார்க்க வந்த பாதிப் பேரை போலீஸார் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வெளியே வழிமறித்தும், உள்ளே கூட்டம் குறைந்தபாடில்லை. கொளுத்தும் வெளியிலில் மனுவை பதிவுச்செய்ய நீண்ட வரிசையில் நின்றனர். ஏற்கனவே பலமுறை முயன்று தீர்வு கிடைக்காமல் போராடி, இறுதி தீர்வாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மக்களே அதில் அதிகம். இப்படி நொந்து போய் வருபவர்களை வெயிலில் வாட்டுவது என்ன நியாயம்? னுவுக்கு தீர்வென்பது மக்களுக்கு தாமதமாக கிடைத்தாலும், மனு கொடுக்கும் போதாவது, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு சற்று ஆறுதலாக நிழல் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.