/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பணியிட மாற்றம் கிடைக்காமல் தவிக்கும் பார்வையற்ற ஆசிரியை முதல்வரின் பார்வை கிடைக்குமாபணியிட மாற்றம் கிடைக்காமல் தவிக்கும் பார்வையற்ற ஆசிரியை முதல்வரின் பார்வை கிடைக்குமா
பணியிட மாற்றம் கிடைக்காமல் தவிக்கும் பார்வையற்ற ஆசிரியை முதல்வரின் பார்வை கிடைக்குமா
பணியிட மாற்றம் கிடைக்காமல் தவிக்கும் பார்வையற்ற ஆசிரியை முதல்வரின் பார்வை கிடைக்குமா
பணியிட மாற்றம் கிடைக்காமல் தவிக்கும் பார்வையற்ற ஆசிரியை முதல்வரின் பார்வை கிடைக்குமா
ADDED : ஆக 21, 2011 01:22 AM
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இளங்கலை உதவி ஆசிரியராக பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியைக்கு பணியிடம் மாறுதல் கிடைக்காமல் பல மாதங்களாக தவித்து வருகிறார்.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆயிஷா தஸ்லிமா, 28.
மண்டபம் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் இளங்கலை உதவி ஆசிரியர். தந்தை மகமூது இறந்து விட்டதால் தாய் பாத்திமா பாதுகாப்பில் உள்ளார். இவருக்கு கடந்தாண்டு மாற்றுத்திறனாளி பிரிவில் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி கிடைத்தது. அவர் கூறியதாவது: பார்வையில்லா விட்டாலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் படித்தேன். காரைக்குடி அழகப்பா பல்கலை அளவில் ஆங்கிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி முதல்வர் சுமையா மற்றும் சீதக்காதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் அளித்த உதவியால் படித்து உதவி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தாயால் என்னை முழுமையாக பாதுகாக்க முடியவில்லை. இதன் காரணமாக சொந்த ஊருக்கு பணிமாற்றம் செய்யக் கோரி பலமுறை மனுச் செய்தும் பலன் இல்லை. முதல்வர் ஜெ., எனக்கு பணியிடம் மாறுதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


