Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

ADDED : ஆக 17, 2011 02:56 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மனைவியிடம், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வசூலான, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை, குப்புசாமியின் மனைவி மனோன்மணி வங்கியில் செலுத்துவதற்காக, கடந்த 8ம் தேதி அவரது மொபெட்டில் சென்றுள்ளார். தொப்பம்பட்டி ஜேடர்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது, பைக்கில் வந்த இருவர், மனோன்மணி மொபட் மீது மோதி அவரை கீழே தள்ளியுள்ளனர். பின், அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். அதுசம்மந்தமாக, நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் சென்ற 11ம் தேதி அதே பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபரை, போலீஸார் கைது செய்தனர். மேலும், வழக்கில் தலைமறைவாக திரிந்த ராசிபுரம் காரமராஜர் நகரைச் சேர்ந்த காளி (எ) காளிதாஸ் (31) என்பவரை நேற்று மாலை ராசிபுரம் அருகே சீராப்பள்ளி என்ற இடத்தில் உள்ள டீக்கடையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் பைக் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us