/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வெட்ட வெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் அவலம் :தவிப்புக் குள்ளாகும் கிராமமக்கள்வெட்ட வெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் அவலம் :தவிப்புக் குள்ளாகும் கிராமமக்கள்
வெட்ட வெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் அவலம் :தவிப்புக் குள்ளாகும் கிராமமக்கள்
வெட்ட வெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் அவலம் :தவிப்புக் குள்ளாகும் கிராமமக்கள்
வெட்ட வெளியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் அவலம் :தவிப்புக் குள்ளாகும் கிராமமக்கள்
ADDED : ஆக 16, 2011 03:57 AM
பழநி : பழநி அருகே பயணிகள் நிழற்கூரையில், ரேஷன் பொருள் வினியோகிக்கும் அவலம், பத்து ஆண்டுகளாக நீடிக்கிறது.
பழநி-கொடைக்கானல் ரோட்டில், வரதமாநதி அணை, புளியமரத்துஷெட், அண்ணாநகர் கிராமங்கள் உள்ளன. பாலசமுத்திரம் கூட்டுறவு சங்கம் மூலம், ரேஷன் பொருள் வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும், நிரந்தர கட்டடம் இல்லை. இதனால் புளியமரத்துஷெட் பகுதியில் உள்ள நிழற்கூரையில் ரேஷன் ஊழியர்கள் ரசீது வழங்க, திறந்த வெளியில் பொருட்கள் வினியோககிக்கப்படுகிறது. மக்கள் ரோட்டோரத்தில் காத்திருந்து வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. குட்டிக்கரடு பகுதியில் உள்ள 180 க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், ஓபுளாபுரம் கடையில் பொருட்கள் பெறுகின்றனர். இந்த கார்டுதாரர்களையும், பாலசமுத்திரம் கூட்டுறவு சங்கத்துடன் இணைத்து பொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக் கை நீண்டநாட்களாக உள்ளது.வழங்கல் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: குறைந்தபட்சம் 750 கார்டுகள் இருந்தால் மட்டுமே நிரந்தர கடை அமைக்கப்படும். புளியமரத்துஷெட், அண்ணாநகர், வரதமாநதி பகுதிகளில் மொத்தம் 325 கார்டுகள் உள்ளன. குட்டிக்கரடு கார்டுதாரர்களையும் இணைத்தால், இப்பகுதியில் நிரந்தர கடை அமைக்கலாம். இதற்கான முயற்சியை, கூட்டுறவு துறையினர் மேற்கொள்ள வேண்டும், என்றார். மாவட்ட நிர்வாகமும், கூட்டுறவு நிர்வாகமும் நிரந்தமான இடத்தில் ரேஷன் கடை அமைக்க முன்வரவேண்டும்.


