/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அதிரடி வாகன சோதனை ரூ.2 லட்சம் அபராதம் வசூல்அதிரடி வாகன சோதனை ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
அதிரடி வாகன சோதனை ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
அதிரடி வாகன சோதனை ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
அதிரடி வாகன சோதனை ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஆக 15, 2011 02:19 AM
பெருந்துறை: ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் ஆய்வாளர்கள் ராமலிங்கம், சுகந்தி, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், தாமோதரன் ஆகியோர் பெருந்துறை பகுதியில் ஒருங்கிணைந்த வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பெருந்துறை, ஈரோடு ரோடு, நசியனூர், சித்தோடு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் ஓடிய இரண்டு ஆம்னி பஸ்களில், ஒன்று தமிழகத்தில் ஓடுவதற்கான பர்மிட் இல்லாததால், அந்த வாகனத்துக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மற்றொரு ஆம்னி பஸ் தகுதி சான்று இல்லாதால், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து விதிமுறை மீறி அதிக பாரம் லோடு ஏற்றி வந்த லாரிக்கு 4,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நெம்பர் பிளேட் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாத ஒன்பது வாகனங்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எமர்ஜென்சி கதவு இல்லாத மூன்று ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.