Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் லாரி மோதி வாலிபர் பலி

கோவில்பட்டியில் லாரி மோதி வாலிபர் பலி

கோவில்பட்டியில் லாரி மோதி வாலிபர் பலி

கோவில்பட்டியில் லாரி மோதி வாலிபர் பலி

ADDED : ஆக 15, 2011 01:18 AM


Google News

கோவில்பட்டி : கோவில்பட்டியில் சைக்கிளில் சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் ஏசி மெக்கானிக் அதே இடத்தில் பலியானார்.கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோடு வஉசி நகரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரது மகன் ஆறுமுகம்(19).

இவர் டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு சென்னையில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோவில்பட்டிக்கு வந்த ஆறுமுகம் தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சைக்கிளில் திரும்பி வரும்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற லாரி எதிர்பாராத விதமாக பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் அதே இடத்தில் ஆறுமுகம் துடிதுடித்து இறந்தார். லாரியை நெல்லை மாவட்டம் மேலக்கல்லூர் கிராமத்தை சேர்ந்த அனைந்தன் என்பவரது மகன் மார்த்தாண்டன் ஓட்டி வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்கு பதிவு செய்தார். மேலும் இன்ஸ்பெக்டர் செல்வம் டிரைவர் மார்த்தாண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us