/உள்ளூர் செய்திகள்/சேலம்/கூலி உயர்வு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்கூலி உயர்வு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2011 03:40 AM
கெங்கவல்லி : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தொழிலாளர்களுக்கு கூலித்தொகை குறைத்து வழங்குவதை கண்டித்து, விவசாயிகள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கெங்கவல்லி யூனியன் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க திருஞானசம்பந்தம், கூடமலை விவசாய சங்க செயலாளர் வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாய சங்க வட்ட தலைவர் கருத்தாப்பிள்ளை முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், கெங்கவல்லி யூனியனில் உள்ள, 14 கிராம பஞ்சாயத்துகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு, 119 ரூபாய் வழங்க வேண்டும்.அனைத்து தொழிலாளர்களுக்கும், நாள்தோறும் வேலை வழங்க வேண்டும். அளவை குறைத்து, 40 முதல் 50 ரூபாய் என தொழிலாளர்களுக்கு கூலியை தொகையை குறைத்து வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணபதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், வேல்முருகன் உள்ளிட்ட சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.