Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சுரங்க பாதுகாப்பு வார விழா

சுரங்க பாதுகாப்பு வார விழா

சுரங்க பாதுகாப்பு வார விழா

சுரங்க பாதுகாப்பு வார விழா

ADDED : ஆக 09, 2011 01:10 AM


Google News

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மெட்ராஸ் சிமென்ட் தொழிற்சாலையில், தமிழ்நாடு மற்றும் கேரளா சுரங்க பாதுகாப்பு அமைப்பு சார்பாக, சுரங்க பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

தொழிற்சாலையின் துணை தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு, கேரளா சுரங்க அமைப்பு சங்க செயலர் டேனியல் ஜெயகுமார், ஆலோசகர் கவுரப்பன் முன்னிலை வகித்தனர். துணை பொது மேலாளர் நம்பிராஜன் வரவேற்றார். தென்னிந்திய சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் சென்குப்தா பேசினார். முதல், இரண்டு மற்றும் மூன்றாம் வகை 79 சுரங்க தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை மெட்ராஸ் சிமென்ட் அதிகாரிகள் செய்தனர். திருநெல்வேலி மண்டல செயலர் கணேசன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us