/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் :மாணவர்களுக்கு அப்துல்கலாம் அழைப்புநானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் :மாணவர்களுக்கு அப்துல்கலாம் அழைப்பு
நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் :மாணவர்களுக்கு அப்துல்கலாம் அழைப்பு
நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் :மாணவர்களுக்கு அப்துல்கலாம் அழைப்பு
நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் :மாணவர்களுக்கு அப்துல்கலாம் அழைப்பு
ADDED : ஆக 07, 2011 01:34 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த சாஸ்த்ரா பல்கலையில் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
துணைவேந்தர் சேதுராமன் தலைமை வகித்தார். வேந்தர் கந்தசாமி விழாவை தொடங்கி வைத்தார். டீன் சாமிநாதன் அறிமுகவுரையாற்றினார். டீன் வைத்தியசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். விழாவில் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: புற்றுநோய் சிகிச்சையளிக்க நானோ தொழில்நுட்பத்தில் மனிதனின் உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் முறை மிகுந்த செலவு உள்ளதாக இருக்கிறது. நானோ தொழில்நுட்பம் மூலம் ரோபோக்களை உருவாக்கி மனிதர்களின் உயிர் அனுக்களில் செலுத்தி அதன்மூலம் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சையளிக்க நானோ தொழில்நுட்ப மருத்துவ ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். அதுபோல், ஹெச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்கும் இத்தொழில்நுட்பம் மூலம் சிகிச்சையளிக்கும் ஆராய்ச்சிகளிலும் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல புத்தகங்களையும், அறிவியல் நூல்களையும் படிக்க வேண்டும். மற்றவர்களை போல் இல்லாமல் தனித்தன்மையுடன் நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, மருத்துவம், பொறியியல் என எந்தத்துறையை எடுத்தாலும் அதில் நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும். வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும். அப்போது, இந்த உலகை மாற்றியமைக்க முடியும். தனித்துவத்துடன் இருந்ததால் தான் சர்.சி.வி.ராமன், விக்கிர சாலமன், எம்.எஸ்.சாமிநாதன், வர்கீஸ், டாடா போன்றோர் வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட தடைகளை உடைத்து முன்னேறினர். எனவே, நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் உள்ளதா? என்று கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். மின் விளக்கு என்றால், உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது தாமஸ் ஆல்வா எடிசன். அதுபோல் விமானம் என்றால் ரைட் சகோதரர்களும், தொலைபேசி என்றால் கிரஹாம் பெல் தான் ஞாபகம் வரும். ஏராளமானோர் கடல் பயணம் மேற்கொள்கிறார்கள். கடலும், வானமும் ஏன் நீல நிறத்தில் உள்ளது? என்ற கேள்வி எழுந்ததால் தான் அதற்குறிய ஆராய்ச்சியில் சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றார். கோடிக்கணக்கானோர் இருந்தும் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஆய்வின் காரணமாக தான் சந்திரசேகர் புகழ் பெற்றார். இவர்கள் அனைவரும் தனித்தன்மையுடன் அவர்களாகவே இருந்தது தான் காரணம். எனவே, இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அப்போது நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். இன்றைய இளைஞர்களிடம் மிக உயர்ந்த குறிக்கோள்களும் சிறந்த அறிவும் கடின உழைப்பும், சுறுசுறுப்பும் உள்ளது.வரும் 2020ல் இந்தியா வல்லரசு ஆகும். அதற்கு நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட வேண்டும். மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். சிறந்த கல்வியும், பொருளாதாரமும் இருக்க வேண்டும்.முதலீட்டாளர்கள் அதிகம் உருவாக வேண்டும். மக்களிடம் எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டும். படிப்பறிவு உயர வேண்டும். குறிப்பாக, குழந்தைகள், பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். வேளாண் சார்ந்த உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். தொழில் முனைவோர் ஏராளமானோர் உருவாக வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி பெற வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.