/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் பிறந்த பெண் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்புபண்ருட்டியில் பிறந்த பெண் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு
பண்ருட்டியில் பிறந்த பெண் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு
பண்ருட்டியில் பிறந்த பெண் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு
பண்ருட்டியில் பிறந்த பெண் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு
ADDED : ஆக 06, 2011 02:18 AM
கடலூர் : பண்ருட்டி மருத்துவமனையில் தாய் தவிக்கவிட்டு சென்ற பெண் 'சி”' வை கலெக்டர் அமுதவல்லி தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.பண்ருட்டி அர” மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி பிரசவ வலியோடு வந்த பெண் ஒருவர், உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாசிப்பாளையம் செல்வம் மனைவி குமாரி, 28; என்ற முகவரி கொடுத்து சேர்ந்தார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை விட்டு குமாரி மாயமானார்.இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தை பெற்ற பெண் போலி முகவரி கொடுத்து சேர்ந்தது தெரியவந்தது.இதையடுத்து அக்குழந்தை மாவட்ட சமூக நல அலுவலகம் மூலமாக முதல்வரின் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கடலூர் அர” தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டது.இக்குழந்தையை கடலூர் முகாம் அலுவலகத்தில் சென்னையில் உள்ள 'ஏ” குழந்தைகள் இல்லம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவன காப்பாளரிடம் கலெக்டர் அமுதவல்லி ஒப்படைத்தார்.சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, மாநில குழந்தைகள் தத்தெடுப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் ”ஜாதா சீனுவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.